சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஜனவரி 08,2025



கோவை; சபரிமலை கூட்ட நெரிசலை தவிர்க்க போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் – சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல்(06058) சிறப்பு ரயில், வரும், 15 ம் தேதி அதிகாலை 4:25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு, 11:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம்(06059) சிறப்பு ரயில் வரும், 16 ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8:00 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அதேபோல், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல்(06046) சிறப்பு ரயில், வரும், 16 ம் தேதி மாலை 6:15 மணிக்கு, எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம்(06047) சிறப்பு ரயில், வரும், 17ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:00 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்