அன்னூர்; அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூரில், 300 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேக பூஜையும், காலை 5:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. காலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தி கோஷம் எழுப்பியபடி பல ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தனர். அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், விழா அமைப்பாளர் கே.ஜி. ராமசாமி, அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பெருமாள் திருவீதியுலா தேரோடும் வீதியில் நடந்தது.