உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, காக்கநல்லூர் கிராமத்தில் பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், ஆஞ்சநேயர் தனி சன்னிதி அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு தனி சன்னிதியில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா இன்று நடந்தது. முன்னதாக, காலை 7:30 மணிக்கு யாக சாலையில் கணபதி ஹோமம், பூர்ணாஹிதி, சங்கல்பம் ஆகியவை நடந்தது. காலை 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலச நீரை கொண்டு சென்று, வேதமந்திரங்கள் ஓதியவாறு ஆஞ்சநேயர் சிலை மீது ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆஞ்சநேயர் சிலைக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.