ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், பங்குனி கிருத்திகையையொட்டி, இன்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரணிய சுவாமி, உற்சவர் கோடையாண்டவர் முருபெருமானுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் படி மாலை அலங்காரத்திலும், உற்சவர் முருகப்பெருமான் வீராசன கோல அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷமிட்டு முருபெருமானை வழிப்பட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில், பொங்கல், மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.