அனுப்பர்பாளையம்; திருப்பூர், வளையங்காடு, வ.உ.சி., நகரில் உள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா கடந்த, 30ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 7:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். காலை 9:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். மாலை குமார் நகர் கருப்பராயன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு கும்பம் கங்கையில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மதியம் மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.