உடுமலை; கேரளாவிலிருந்து துவங்கியுள்ள ஸ்ரீராம ரத யாத்திரை உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தது.
கேரளாவின் மலப்புரம் பகுதியில், வண்டூர் செங்கோடு ஆஞ்சநேயர் ஆசிரமத்திலிருந்து, நான்காம் ஆண்டாக ஸ்ரீராம ரத யாத்திரை, மார்ச் 25ம்தேதி முதல் ஏப்., 8ம் தேதி வரை நடக்கிறது. இந்த யாத்திரை கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழகத்திலிருந்து புறப்பாடு நிகழ்கிறது. இறுதியில் ஸ்ரீராமயண நவாக யாகத்துடன் ராம நவமி அன்று நிறைவடைகிறது. நேற்றுமுன்தினம் பொள்ளாச்சி ஆர்ஷ வித்யபீடத்திலிருந்து ராமரத யாத்திரை புறப்பட்டது. பின்னர் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் இந்த ரத யாத்திரை வந்தடைந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ராமர் பட்டாபி ஷேக விக்ரகத்தை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் ராமானந்தநாதா சைதன்யா தலைமையில் உடுமலையைச் சேர்ந்த ஆறுமுகம், தங்கவேலு செய்திருந்தனர்.