குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்



காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று நடந்தது.


குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடந்தது. கடந்த ஏப்.1ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், கொடியேற்றமும் நடந்தது. தினமும் இரவு 8 மணிக்கு சண்முகநாதன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாணம், பூப்பல்லாக்கும், தெப்பத் திருவிழாவும் நடந்தது, முக்கியத் திருவிழாவான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 5.30 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. நாளை தீர்த்தவாரியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்