மயிலாடுதுறை; மொழையூர் கிராமத்தில் ஶ்ரீராம நவமியை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் சிதா கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 04ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், ராம நவமியை முன்னிட்டு சிதா கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கலைமாமணி உடையாளூர் கல்யாணராம பாகவதர் தலைமையிலான குழுவினர் அஷ்டபதி பாடல்களை பாடினர். தொடர்ந்து இன்று காலை உஞ்சவர்தி, திவ்யநாம பஜனை ஆகியவை நடைபெற்றது. பெண்கள் மங்கல பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்தனர். தொடர்ந்து திருக்கல்யாணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடி மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை குப்புசாமி, பாலகுரு, ரவி உள்ளிட்ட கிராம மக்கள் செய்திருந்தனர்.