கோவை ; ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் கடந்த 28-03-2025 முதல் ராம நவமி விழா நடைபெற்று வருகிறது.முதல் நாள் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் வேத பாராயண நிகழ்வுகள் நடைபெற்றது. இரண்டாம் நாள் சனிக்கிழமை காலை 05.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் அதை தொடர்ந்து ஹோமங்கள் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மூன்றாம் நாள் ஹோமங்கள் மற்றும் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். 31.03-2025 திங்கள் அன்று சுவாமி சேஷ வாகனத்திலும் அதையடுத்து செவ்வாய்க்கிழமை அனுமந்த வாகனத்திலும் 1 புதன்கிழமை கருட வாகனத்திலும் 1 வியாழக்கிழமை கஜ வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி அளவில் திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சனிக்கிழமை சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நிறைவாக 06.04-2025 ஸ்ரீராம நவமி தினத்தையொட்டி காலை 7 மணியளவில் உற்சவர் ராமபிரான் சீதா தேவியுடன் புஷ்ப வாகனத்தில் திருவீதியுலா வந்தார்.இதையடுத்து கோவிலின் அர்த்த மண்டபத்தில் ராமர் லக்ஷ்மணர் சீதையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரான் மற்றும் சீதா தேவியை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.