நரிக்குடி மானுார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்



நரிக்குடி; நரிக்குடி மானூரில் வள்ளி, சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் நடந்தது. வாழவந்தாளம்மன் கோயிலில் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி துவங்கி, 10 நாட்கள் மண்டகப்படி பூஜை நடந்தது. அன்னம், மயில், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. வள்ளி, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. இதில் விவசாயம் செழிக்க வேண்டி கடலை, மிளகாய், வாழைப்பழம், வெங்காயம், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை சூறை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்