இரண்டு ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட மேல்பாதி அம்மன் கோவில்; போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் தரிசனம்



விழுப்புரம்; விழுப்புரம் அருகே உள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி இரு தரப்பு மக்கள் சாமி தரிசனம் திறக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல் பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு பிரிவினர் தரிசனம் செய்தபோது மற்றொரு சமூகத்தினர் தரிசனம் செய்யவிடாமல் வெளியேற்றினர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இருப்பினும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால் ஒரு பிரிவினர் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்க்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பினர் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் அதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


அந்த உத்தரவின் படி இருதரப்பினரையும் கோவிலுக்குள் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி திரெளபதி அம்மன் கோவிலில் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு இருதரப்பினரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி இன்று ஒரு சமூகத்தை சார்ந்த ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள்ளே செல்லாத நாங்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ததாகவும், இதற்கு முன்னதாகவும் கோவிலில் சென்று தரிசனம் செய்ததில்லை என்றும், திருப்தியாக சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தனர். இந்த கோவிலானது தினந்தோறும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திறக்கப்படும். வெள்ளிக்கிழமை மட்டும் மாலையில் ஒரு மணி திறக்கபட்டு இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்