நாச்சியார் திருக்கோலத்தில் வீதி உலா வந்த காஞ்சி அஷ்டபுஜ பெருமாள்



காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, அழைக்கப்படும் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், ஏப்.,13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை, நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கில் வீதியுலா வந்து அஷ்டபுஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏழாம் நாள் உத்சவமான வரும் 19ல், காலை தேரோட்டமும், மாலை திருமஞ்சனமும் விமரிசையாக நடைபெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்