காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள பலவான்குடி செங்கமலநாயகி அம்மன் கோயில், சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
பலவான்குடியில் உள்ள செங்கமலநாயகி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த ஏப். 22ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறும். நேற்று தேர்த்திருவிழா தொடங்கியது. தேரில் செங்கமலநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை பிள்ளையார் மடத்தில் இருந்து தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர். இரவு தேர் கோயிலை சென்றடைந்தது. இன்று மீண்டும் கோயிலில் இருந்து தேர் பலவான்குடி பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் வந்தது. இதில் பலவான்குடி, ஆத்தங்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.