திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை தேரோட்டம்



திருவாடானை; திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 8:45 மணிக்கு தேரோட்டம் நடந்தது. வல்மீகநாதர் பிரியாவிடையுடன் அமர்ந்த தேரும், பாகம்பிரியாள் அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக மணிகண்டன் குருக்கள், வல்மீகநாத குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு தேர்கள் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்கள் இழுக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு நிலைக்கு செல்லும். தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்