புதுச்சேரி; மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தில் 33 லட்சம் ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளது. இது புதுச்சேரி எல்.ஜி., நிறுவனத்தினர் வாயிலாக ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்கான செலவில், மூன்றில் ஒரு பகுதியை புதுச்சேரி யூகோ வங்கி பிரதான கிளையின் வாயிலாக ரூ.11.90 லட்சம் நன்கொடையாக திரட்டப்படுகின்றது. மேலும், பக்தர்கள், உற்சவதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் அளித்த நன்கொடை தொகை போக, மீதமுள்ள தொகையை தேவஸ்தான நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த குளிர்சாதன கருவியை தேவஸ்தானத்தில் பொரு த்தும் பணியை ஆகஸ்ட் மாதத்திற்குள் விரைவாக முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பங்களிப்பு தொகையான 11.90 லட்சம்ரூபாயை யூகோ வங்கியின் மண்டல மேலாளர், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இக்காசோலையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன் முன்னிலையில் கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் எல்.ஜி., நிறுவனத்தினர், யூகோ வங்கி கிளை மேலாளர், அதிகாரிகள், கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.