உடுமலை: உடுமலை நேதாஜி மைதானம் அருகேயுள்ள, காளியம்மன் கோவில் திருப்பணி துவக்க விழா பூஜைகள் நடந்தது.
உடுமலை வித்யாசாகர் ரோட்டிலுள்ள காளியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்வதற்காக, விமானம் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 6:30 மணிக்கு, யாக பூஜைகள், விமானம் கலாகர்ஷணம், விமான பாலாலயம், பிரதிஷ்டை, தீபாராதனை மற்றும் திருப்பணி துவக்கம் நிகழ்ச்சிகள் நடந்தன. அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் திருப்பணிக்குழுவினர் பங்கேற்றனர்.