சிவாஜி நகர் ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் முன்பு, ஸ்ரீசங்கஷ்ட்டஹர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலையில் ஸ்ரீ காசி விஸ்வாதேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் முன்பு ஸ்ரீசங்கஷ்ட்டஹர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இரு நாட்கள் விழா நடக்கிறது.
முதல் நாள் காலை 10:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சயனாதி வாசம், நுாதன கலசம், கோவில் பிரதக் ஷ்னம்; மாலை 5:30 மணிக்கு முதல் கால யாக பூஜை; இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹூதி. காலையிலும், மாலையிலும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இரண்டாம் காலையில் இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி ரக் ஷாபந்தனம் நடக்கிறது. காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் துலா லக்னத்தில் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகத்திற்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.