திருமலையில் அனந்த விரத வழிபாடு; சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி



திருப்பதி; திருமலை திருப்பதியில் அனந்த விரத வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.


திருமலையில் அனந்த பத்மநாப சுவாமிக்கு அனந்த விரத வழிபாடு இன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத சுக்ல சதுா்த்தசியில்  அனந்த பத்மநாப சுவாமி விரத வழிபாடு நடைபெறும். அதன்படி இன்று நடைபெற்ற வழிபாட்டில், திருமலை கோவிலில் இருந்து சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஊா்வலமாக சென்று, வராக சுவாமி கோயில் அருகில் அமைந்துள்ள புஷ்கரிணியில் பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சக்கரஸ்நானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருமலையில் ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தின் கடைசி நாளான வைகுண்ட துவாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரதம் ஆகிய நாட்களில் மட்டும் சக்ரஸ்நானம் செய்யப்படுவது குறிபிடத்தக்கது. விழாவில் தேவஸ்தான கூடுதல் அலுவலர சி.எச். வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்