உடுமலை ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு



உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா, திருக்கல்யாண உத்சவ விழா நடந்தது. இதையொட்டி, நேற்றுமுன்தினம் காலை, 7:00 மணிக்கு விளக்கு ஏற்றுதல், கோ பூஜை, தேவதா அனுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனை, விஷேச ஹோமங்கள் நடைபெற்றன. இவ்விழாவில், குறிஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்