திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன முறையில் மாற்றம் இல்லை



திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் எப்போதும் செய்யப்பட்டிருக்கும் அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  சில சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி போலியானது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் மூலம் 1000 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கான தரிசன இடங்களை ஒதுக்கி வருகிறது.ஒவ்வொரு பக்தருக்கும் ரூ 50 மதிப்புள்ள ஒரு இலவச லட்டும் வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, திருமலை நம்பி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கான இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வரிசை வாயிலாக தரிசனத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் சரியான தகவல்களைப் பெறுவதற்கு, அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tirumala.org மற்றும்  https://ttdevastanams.ap.in மூலமே தகவல்களை அறியுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்