நெற்குணத்தில் பழமையான கோவிலில் கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு



திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அருகே கோவில் புனரமைப்பு பணின்போதா 11ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த நெற்குணம் கிராமத்தில், திருப்பனிந்துறை நாயனார் கோவில் உள்ளது. தென்பெண்ணை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் இக்கோவில் மிகவும் பழமையானது. வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் கோவில் சிதிலமடைந்து பல ஆண்டுகளாக மண் முடி இருந்தது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவிலை புனரமைக்கும் பணி சமீபத்தில் துவங்கப்பட்டது. இதற்காக மண் குவியியல் மற்றும் எஞ்சிய கல் கட்டிடங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது கொற்றவை (துர்க்கை) புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன், விழுப்புரம் கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், கல்வெட்டு ஆர்வலர்கள் கார்த்திகேயன், அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


இது குறித்து உதியன் கூறியதாவது. 11ம் நூற்றாண்டை சேர்ந்த எண்தோளி என்று அழைக்கப்படும் கொற்றவை (துர்க்கை) சிற்பமாகும். சோழர்கால புடைப்பு சிற்பம். 48 அங்குல உயரம், 27 அங்குல அகலம் கொண்ட நீள் கோள பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கண்ணி மாலையுடன் கூடிய கரண்ட மகுடம் தாங்கியும், இரண்டு செவிகளில் குழைகளும், கழுத்தை சவடியும் (அட்டிகை) முத்து மணி ஆரமும் அணி செய்கிறது. மார்பில் கச்சையும், இடை முதல் தொடை வரை அரையாடை அழகிய முடிச்சுகளான சுங்குகளுடன் அணிந்துள்ளாள். அருள் சுரக்கும் கண்களுடன், எட்டு கரங்களில் காட்சியளிக்கிறாள். நடுநாட்டில் இவ்வகை போர் தெய்வமான கொற்றவை நடுக்கல் அதிகமாக உள்ளது. இவ்வாறு கூறினார் உதியன்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்