ஆன்லைனில் பதிவில் ஆப்சென்ட்: சபரிமலையில் குறைந்தது கூட்டம்

நவம்பர் 22,2025



சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் சன்னிதானத்தில் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.


சபரிமலையில் மண்டல காலம் துவங்கிய நவ., 17, 18 தேதிகளில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தண்ணீர், உணவு இல்லாமல் 8 முதல் 10 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்து கிடந்தனர். பம்பையில் பல மணி நேரம் பக்தர்கள் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமானவர்கள் ஐயப்பசுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்று பந்தளத்தில் தங்கள் பயணத்தை முடித்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைத்தது. இந்த கவுன்டர்கள் தற்போது நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியாரில் மட்டுமே உள்ளது. பம்பை, எருமேலி உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த கவுண்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இருமுடி எடுத்து வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். நிலக்கல்லில் அதிகாலை 3:00 மணிக்கு ஸ்பாட் புக்கிங் தொடங்கிய அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு ஆகிவிடுகிறது. அதன்பின் வரும் பக்தர்கள் நிலக்கல்லிலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ள நிலையில் அதில் 55,000 பேர் மட்டுமே சபரிமலை வருகின்றனர். இதனால் நேற்று காலை 6:00 மணிக்கு பின்னர் பெரிய நடை பந்தலில் வரிசை இல்லாத நிலை காணப்பட்டது. வரும் பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தரிசனம் முடித்து செல்கின்றனர். 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்