பொள்ளாச்சியில் பொன்னர், சங்கர் திருக்கல்யாண உற்சவம்



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் மீனாட்சியம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில், பொன்னர், சங்கர் கதைப்பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.


அதன் தொடர்ச்சியாக கடந்த, 2ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி, மங்கள இசையுடன் துவங்கியது. மாலை, 6:15 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. இரவு, 7:15 மணிக்கு அண்ணன்மார்சுவாமி கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:15 மணிக்கு பொன்னர், சங்கர், ஸ்ரீ பச்சாயி, ஸ்ரீ பவளாயி திருக்கல்யாண பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. வேதபாராயணம், திருமுறைப்பாராயணம், சங்கல்பம், விக்னேஸ்வரர் பூஜை, புண்யாகவாஜனம், கலச ஆவாஹனம், செல்லாண்டியம்மன் பூஜை, ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, திருமாங்கல்யதாரணம், உபசார பூஜைகள், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. திருக்கல்யாணத்தை, உடுமலையை சேர்ந்த கலைக்குழுவினர் சீதாராமன், சிவா ஆகியோர் நடத்தினர். இதில், கோவில் அறங்காவலர் தனபாலகிருஷ்ணன், பொதுமக்கள் பங்கேற்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்