சபரிமலையில் நனவாகிறது ரோப்வே கனவு; டிரோன் மூலம் வெட்டப்படும் மரங்கள் நிர்ணயம்

டிசம்பர் 08,2025



சபரிமலை; சபரிமலையில் ரோப்வே அமைப்பதற்காக வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை டிரோன் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 80 மரங்கள் வெட்ட வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


சபரிமலையின் நீண்ட நாள் கனவாக ரோப்பே உள்ளது. பம்பையில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் மலை மீது அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு பொருள்கள் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆரம்பத்தில் கழுதை மீது கொண்டுவரப்பட்ட பொருட்கள் தற்போது டிராக்டர்களில் கொண்டு வரப்படுகிறது. டிராக்டர்களின் ஓட்டம் பக்தர்களுக்கு கிலியை ஏற்படுத்துகிறது. இதனால் ரோப்பே அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து பல கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.


பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கி.மீ. தூரத்தில் எழுதி 271 கோடி ரூபாய் செலவில் இது அமைக்கப்படுகிறது. காட்டின் உட்பகுதியில் மொத்தம் ஐந்து தூண்கள் நிறுவப்படும். இதற்காக மரங்கள் வெட்டுவது குறித்து பல கட்ட ஆய்வுகள் நடைபெற்றது. மரங்கள் வெட்டுவதற்காக லேசர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட கணக்கு சரிவரவில்லை என்று பெரியாறு வனவிலங்குகள் சரணாலய போர்டு கூறியது. இதை தொடர்ந்து கேரள உயர் நீதிமன்ற அனுமதியுடன் டிரோன் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. இதன்படி மொத்தம் 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று வனவிலங்கு சரணாலய போர்டின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ரோப்வே தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது. 2026 மகரஜோதி திருவிழாவின் போது இதற்கு அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட 18 ஸ்டெப்ஸ் தாமோதர் கேபிள் கார் நிறுவனம் இதை நிறுவுகிறது. மொத்தம் 60 கேபிள் கார்கள் இதில் பயன்படுத்தப்படும். பம்பையில் இருந்து சரக்குகள் கொண்டு வருவதற்காக இது நிறுவப்பட்டாலும் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் இதை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்