திருப்பதி; அன்னமாச்சார்யா இசை மேதை, ஏழுமலையான் பக்தர். தென்னிந்திய இசையில் ஏராளமான மரபுகளைத் தோற்றுவித்தவர்,32,000 கீர்த்தனைகளை இயற்றியவர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் கிராமத்தில் (1408) பிறந்தவர். தென்னிந்திய இசையில் ஏராள மான மரபுகளைத் தோற்றுவித்தார். பஜனை மரபைத் தொகுத்து வழங்கிய சிறப்பு பெற்றவர். பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் இவரால்தான் உருவாக்கப்பட்டது. ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. ராமானுஜர் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.
பதகவிதா பிதாமகர் ஸ்ரீ தல்லப்பாக்க அன்னமாச்சார்யாரின் 523-வது பிறந்த நாள் மார்ச் 15 அன்று திருப்பதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கொண்டாடவுள்ளது. இந்நாளையொட்டி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீவாரி கோவிலிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு நாராயணகிரி தோட்டங்களைச் சென்றடைவார். அதனைத் தொடர்ந்து, அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்கள் சப்தகிரி சங்கீர்த்தன கோஷ்டி கானம் இசை நிகழ்ச்சியை நிகழ்த்துவர். அதன் பிறகு, சுவாமி தனது இரு தேவியருடன் கோவிலில் வெஞ்சேப்பு வைபவத்தில் அருள்பாலிப்பார்.