பூவராகசாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்



ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த, 23 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக வரும், 29 ம் தேதி காலை தேர் திருவிழாவும், மே, 1ந்தேதி மதியம் மட்டையடி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்