புதுச்சேரி: பு துச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவ விழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை வாசவி கன்னிகா பரமேஸ்வரி கலச ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து, மூலமந்திரம், நவக்கிரக மகாலட்சுமி ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.