திருப்போரூர் தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு



திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.

திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இன்று காலை 11:08 மணிக்கு, குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணி முதல் 4:00 மணி வரை தேவார திருவாசக முற்றோதல், தட்சிணாமூர்த்தி சுவாமி மற்றும் சனகாதி முனிவர்கள் குறித்த சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு நவகிரக பூஜை, நவகிரக ஹோமம், விசேஷ அபிஷேகம், குரு பெயர்ச்சி பரிகார பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து இன்று, காலை 7:00 மணிக்கு, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம், சுவாமிக்கு தீபாராதனையும், மாலை 5:00 மணிக்குமேல் புஷ்பாஞ்சலி, தீபாராதனையுடன் பரத நாட்டியம் நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்கு சாந்தி பூஜை மற்றும் விடையாற்றி உத்சவத்துடன் விழா நிறைவடைகிறது. 

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்