டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா



ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இன்று முற்பகல் 11:08 மணிக்கு குருபகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியானார். இதனை தொடர்ந்து ஸ்ரீ கந்தநாதர் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. குருபகவான் உட்பட நவகிரகங்களுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உட்பட பல வகை அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 12 ராசிகளை சேர்ந்த பக்தர்கள் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனை செய்தனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்