அத்தியூத்து பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



தேவிபட்டினம்; தேவிபட்டினம் அருகே, அத்தியூத்து பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடப்பதால், விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தேவிபட்டினம் அருகே அத்தியூத்து கோவில் கரை உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன், கருப்பண சுவாமி கோயில், கும்பாபிஷேகம் இன்று காலை 9:35 மணிக்கு மேல் 11:20 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக, நேற்று கணபதி ஹோமம், வாஸ்து பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 8:15க்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, விழா கமிட்டியாளர்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள், யாகசாலை பூஜை பொருட்களுடன், கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். தொடர்ச்சியாக, மே 27, காலை 7:15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை நடைபெற்று, காலை 9:15 மணிக்கு பின்பு நடைபெறும் பூர்ணா குதி தீபாராதனைக்கு பின்பு, காலை 9:35 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனால், கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்