விருத்தாசலம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா



விருத்தாசலம்: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழிவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 


விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த, மே 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இந்நிலையில், நேற்று தீமிதி திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு கழுமரம் ஏறும் நிகழ்ச்சி, காலை 10:00 மணியவளில் அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது.  அதைத்தொடர்ந்து, மாலை 4:00 மணியளவில், பெரிய ஏரியில் இருந்து கரகம் எடுத்து வந்து, தீமிதி திருவிழா நடந்தது.  இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை காலை 9:00 மணியளவில் மஞ்சள்நீர் உற்சவம், மாலை 5:00 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர். 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்