சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மன் முளைப்பாரி ஊர்வலம்



கமுதி: கமுதி அருகே என். வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தில் சந்தன மாரியம்மன்,பட்டத்தரசி அம்மன்,பாம்புலம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் சந்தன மாரியம்மனுக்கு அபிஷேகம் தீபாரதனை நடந்தது.கோயில் முன் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.சந்தன மாரியம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால்,மஞ்சள், சந்தனம் உட்பட பொருட்களல் அபிஷேகம் தீபாராதனை நடந்தது.முக்கிய நிகழ்ச்சியாக முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக முளைப்பாரி தூக்கி சென்று தண்ணீரில் கரைத்தனர். கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்