யாகத்தால் கல்வெட்டுகள் பாதிப்பு வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை



தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், யாகம் வளர்ப்பதால், கல்வெட்டுகள், ஓவியங்கள் புகை சூழ்ந்து கருப்பாக மாறி வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகபுகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு, கட்டட கலைகளை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கோவிலில் உள்ள பழங்காலஓவியங்கள், கல்வெட்டுகளை இந்திய தொல்லியல்துறை பாதுகாத்து வருகின்றன.

இருப்பினும், கோவிலில் திருச்சுற்று மாளிகையில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள் மீது சுற்றுலா பயணியர், பக்தர்கள் தங்கள் பெயர்களை எழுதி பாழாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பெரிய கோவிலின் தென்புறத்தில், அமைந்துள்ள வாராஹி அம்மன் சன்னதியில், ஆஷாட நவராத்திரி விழா, ஜூலை 13ல் தொடங்கியது. வாராஹி சன்னதி அருகே உள்ள திருச்சுற்று மாளிகையில் தினமும் யாகம் நடத்தப்படுகிறது. இந்த யாக குண்டத்திலிருந்து வெளியேறும் புகை, திருச்சுற்று மாளிகையில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள் மீது படிந்து, கருப்பாக மாறி வருகிறது. இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா மற்றும் பஞ்சமி திதி போன்ற நாட்களில், சன்னிதிக்கு தென்புறத்தில் உள்ள திருச்சுற்று மாளிகையில் யாகம் நடத்தப்படுகிறது.

இதனால், யாக குண்டத்திலிருந்து வெளியேறும் புகை, திருச்சுற்று மாளிகையில் பரவி, அங்குள்ள கல்வெட்டுகள், பழங்கால ஓவியங்கள் மீது படிந்து, கருப்பாக மாறி வருகிறது.

இதனை அரண்மனை தேவஸ்தானம், தொல்லியல்துறை சிந்தித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பழங்கால ஓவியங்கள், கல்வெட்டுகளை அழிப்பது வருங்கால சமூகத்திற்கு தெரிய வேண்டிய வரலாற்றை அழிப்பதாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வாராஹி அம்மனுக்கு நடத்தப்படும் அபிஷேக நீர் வெளியேற போதுமான ஏற்பாடுகள் இல்லாத நிலையில், சன்னிதியை சுற்றி அபிஷேக நீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முகம் சுளித்தப்படி அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்