கோவை; ஆடி மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவர் தர்மலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது
கோவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பாலக்காடு மெயின் ரோட்டில் மதுக்கரை மரப்பாலம் அருகே மேற்கு பகுதியில் மலையின் மீது தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 மீட்டர் உயரத்தில் மலை அமைந்துள்ளது. மலையின் மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகள் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் விநாயகர் கோயிலும், நவகிரக சன்னதியும் உள்ளது. தர்மர் வழிபட்டதால் நியாயம், தர்மம், வழக்குகளில் வெற்றி, மற்றும் நீதி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடுசெய்கிறார்கள். இத்தலத்தில் இன்று ஆடி மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு தீப ஒளியில் பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.