விழுப்புரம் ஐயனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்



விழுப்புரம்: ஒட்டேரிப்பாளையம் ஐயனாரப்பன் கோவில் ஆடி உற்சவத்தில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த ஓட்டேரிப்பாளையம் பூரணி, பொற்கலை சமேத ஐயனாரப்பன் கோவிலில், ஆடி மாத உற்சவம் நடந்து வருகிறது. இன்று காலை 8:00 மணிக்கு மூலவர் பொற்கலை, பூரணி சமேத ஐயனாரப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து, மாலை 3:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. 5:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்