திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குரு பூஜை



திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குரு பூஜை நடந்தது.


திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில், சுந்தரர் குரு பூஜை விழா இரு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சுந்தரர் திருமணக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், சிவபெருமான் சுந்தரர் தனக்கடிமை என அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 11:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12:00 மணிக்கு சுந்தரருக்கு குரு பூஜை விழா நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னத்தால் லிங்கம் அமைத்து மகேசுவர பூஜையும், மதியம் 1:00 மணிக்கு அருளாளர் சுந்தரர் அருட்சபையினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் அறிவழகன், கவுதம் குருக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்