சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் குருபூஜை



கள்ளக்குறிச்சி: ஜூலை 23–: கள்ளக்குறிச்சி சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குருபூஜை விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமம் பெருவங்கூர் சாலையில் அமைந்துள்ள கோமதி அம்மன் சமேத சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் திருவாசகம் இயற்றிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பூஜை விழா நடந்தது.

சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

அமைப்பாளர் வேலாயுதம் தலைமையில் சித்தம் அழகியார் உழவாரக் கூட்டத்தினர் சிவபுராணம் பாராயணம் செய்தனர். வழிபாட்டினை சித்தர் பீட நிர்வாகி சீனிவாசன் செய்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் சுப்ரமணியன் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்