ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வரும் 25ல் தேர்திருவிழா



ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா 25ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.


ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா கடந்த 16ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 17ம் தேதி கோவில் பலி பீடம் அருகே உள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பஞ்சமி திதியில் கொடியேற்றப்பட்டு சுவாமி வீதியுலா நடந்தது.


இதையடுத்து தினமும் காலையில் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. 6ம் நாள் உற்சவத்தில் யானை வாகனத்தில் உற்சவர் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் சுவாமி வீதியுலா நடந்தது. நாளை (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு மண்டகப்பாடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தேர் திருவிழா நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்திருவிழா நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்