உத்திரமேரூரில் வெள்ளி கவசத்தில் காட்சி தரும் நுாக்கலம்மன்



காஞ்சி மாநகரின் தெற்கே அமைந்துள்ள உத்திரமேரூரில் புகழ்பெற்ற ஸ்ரீநுாக்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரம் மற்றும் கோவில் உள்பிரகாரத்தில் 27 நட்சத்திரம் தனித்தனியாக சுதைசிற்பமாக காணப்படுகிறது. அதேபோல், கோபுரம் உள்பகுதியில் ஒவ்வொரு ராசிக்கும் தனி, தனியாக 12 ராசிகளுக்குமான உருவங்கள் உள்ளன. கோவில் உள்பிரகாரத்தில் வரசக்தி விநாயகர், பாலமுருகர், நாகலிங்கம், மிகவும் பழமையான ஏழு சப்த கன்னிமார்கள் உள்ளனர். கோவில் மூலஸ்தானத்தில் நுாக்கலம்மன் மற்றும் கெங்கையம்மன் காட்சி அளிக்கின்றனர். 


கோவில் விழாக்கள்: இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் கொளு வைத்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையான நடைபெறும். மேலும், மாதந்தோறும் பவுர்ணமி அன்று ஊஞ்சல் சேவை மாலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது. மாதந்தோறும் பவுர்ணமி அன்று பகல் 12:00 மணிக்கு அறுசுவை உணவு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறும். அதேபோன்று, ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நுாக்கலம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், மாதத்தில் ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை) உத்திரமேரூர் பாவோடு தோப்புத்தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்டும்.


கோவிலுக்கு சென்றடைய வழி: கிளாம்பாக்கம் – உத்திரமேரூர் 57 கி.மீ.,


காஞ்சிபுரம் – உத்திரமேரூர் 28 கி.மீ.,


செங்கல்பட்டில் – உத்திரமேரூர் 32 கி.மீ.,


மதுராந்தகம் – உத்திரமேரூர் 26 கி.மீ.,


வந்தவாசி – உத்திரமேரூர் 26 கி.மீ.,


மேல்மருவத்துார் – உத்திரமேரூர் 27 கி.மீ.,


கோவில் திறக்கும் நேரம்: காலை 6:00 – 9:00 மணி வரை. மாலை 5:00 – 8:00 மணி வரை.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்