கோவையில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் நிகழ்ச்சி; சிறப்பு ஹோமம்



கோவை; ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்பிராஸ் சார்பில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவம் நிகழ்ச்சி கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீ லட்சுமி நாராயணன் மஹாலில் இன்று வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுயம்வர கலா பார்வதி ஹோமம் ஸ்ரீ ருண விமோசன லஷ்மி நரசிம்மர் ஹோமம் ஸ்ரீ தனபிரார்த்திகர ஸ்ரீ சௌபாக்கிய லட்சுமி ஹோமம் ஸ்ரீ ரதி மன்மத பூஜை ஆகியன நடந்தது. காலை 10 மணியளவில்  ஸ்ரீ சுக்த ஹோமம் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் தம்பதி பூஜை ஆகியன நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ கே எஸ் கல்யாணி குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது அதனை தொடர்ந்து ஸ்ரீமதி விஷ்ணு பிரியா அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் ஸ்ரீமதி ராஜேஸ்வரி ரவிசங்கரனின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. மாலை 4.30 மணி அளவில் ஸ்ரீ மாதா என்ற தலைப்பில் முனைவர் ஸ்ரீ தத்தாத்ரேயா சொற்பொழிவு, மாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்ரீமதி சபிதா ஸ்ரீ ராம் குழுவினரின் நாம சங்கீதம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் சனிக்கிழமை அன்று காலை 8 மணி அளவில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் அதனை தொடர்ந்து அஷ்டபதி மற்றும் கிராம சங்கீத நிகழ்ச்சி சென்னை ஸ்ரீ அஸ்வின் குமார் பாகவதர் குழுவினர் தலைமையில் நடைபெறுகிறது அதனை தொடர்ந்து சரஸ்வதி நாட்டிய  குழுவை சேர்ந்த ஸ்ரீ மதி ரேஷ்மி வினோத் அவர்களின் நாட்டியம்   நிகழ்ச்சி அதனை தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகிறது மாலை ஆறு மணி அளவில் பஞ்சபதி தேவதா தியானங்களும் நாம சங்கீர்தன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் உஞ்சவிருத்தியும் காலை 10 மணியளவில் சென்னை ஸ்ரீ அஸ்வின் குமார் பாகவதர் தலைமையில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது பிற்பகல் ஒரு மணி அளவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உத்சவம் நடைபெறுகிறது இந்த மூன்று நாட்களும் இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு விழா குழு சார்பில் கொடுக்கப்படுகிறது இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என விழா குழுவினர் தெரிவித்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்