கள்ளக்குறிச்சி அம்மன் கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜை



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாரியம்மன், துர்கை அம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது.


கள்ளக்குறிச்சியில் பழைய மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அதிகாலை பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் காலசந்தி பூஜைகள் நேற்று நடந்தது. அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்து சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் துர்கை அம்மன், ஏமப்பேர் விஸ்வநாதர் கோவிலில் சிவதுர்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. பெண்கள் விளக்கேற்றி, அம்மன் வழிபாடு குறித்த பாடல்களை பாடினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவில், முத்து மாரியம்மன், புற்று மாரியம்மன், திரவுபதி அம்மன், கங்கை அம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, அண்ணா நகர் துர்கை அம்மன், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரன், அரச மரத்தடி குளத்து மேட்டு தெரு முனியப்பர் சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்