கன்வார் யாத்திரை ஏற்பாடுகள் டில்லியில் முழுவீச்சில் தயார்



புதுடில்லி: ‘‘கன்வார் யாத்திரை பக்தர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்து முகாம்களிலும் சுகாதாரம், மருத்துவ வசதி, மின்சாரம், குடிநீர் மற்றும் பிற வசதிகளை 24 மணி நேரமும் தடையின்றி வழங்க டில்லி அரசு நடவடிக்கை எடுக்கும்,’’ என்று, பா.ஜ.,வை சேர்ந்த டில்லி முதல்வர் ரேகா தெரிவித்தார்.


கன்வார் யாத்திரை, ஜூலை 30-ல் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்கள், ஹரித்வார் சென்று, கங்கை நதியிலிருந்து புனித நீரை எடுத்து வந்து சிவபெருமான் ஆலயங்களில் சமர்ப்பிப்பர். கன்வார் யாத்திரை பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், டில்லி அரசு, பல இடங்களில் வரவேற்பு வளைவுகளை அமைக்க உள்ளது. இந்த யாத்திரை தொடர்பான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்கான கூட்டம், முதல்வர் ரேகா குப்தா தலைமையில், டில்லி தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், டில்லி சுற்றுலாத்துறை அமைச்சரும், கன்வார் குழுவின் தலைவருமான கபில் மிஸ்ரா, குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் அஜய் மஹாவர், அனில் சர்மா, கர்னைல் சிங், சஞ்சய் கோயல் மற்றும் உமங் பஜாஜ் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர், ‘‘தலைநகருக்குள் நுழையும் ஒவ்வொரு பக்தருக்கும் மரியாதையுடன் கூடிய வரவேற்பு, தங்கும் முகாம்கள், பாதுகாப்பு மற்றும் சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய டில்லி அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது,’’ என்று தெரிவித்தார். கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தடுப்புகள் அமைத்தல், போக்குவரத்து பாதைகளை மாற்றுதல், ரோந்துப் பிரிவு பணியாளர்களை ஈடுபடுத்துதல் மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்