உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே–அவுட் செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், ஒவ்வொரு மாதமும் காஞ்சி மகா பெரியவாளின் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, அனுஷ பூஜை நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்துக்கான காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை, மிக விமரிசையாக நடைபெற்றது. விக்னேஷ்வர பூஜையுடன் ஆரம்பித்து, பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, குருத்யானம் , வேதபாராயணம், காஞ்சி மஹா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, தூப, தீப நைவேத்யம், மந்திர புஷ்பம், சதுர்வேத பாராயணம், கற்பூர ஹாரத்தி காட்டப்பட்டது. மேலும், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. குரு கீதம், நாம ஸங்கீர்த்தனம் மற்றும் எல்லா உபசாரங்களின் முடிவில் தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும் , ஆரோக்கியத்திற்கும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. அனுஷ பூஜை ஏற்பாடுகளை செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.