திருவெள்ளறை புண்டரிகாட்ச பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்



திருவெள்ளறை :  திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆடி ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.


ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின்  உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஜேஸ்டாபிசேகத்தை முன்னிட்டு  இன்று (25ம் தேதி)  காலை வட திருகாவிரியிலிருந்து ( கொள்ளிடம் ஆறு)தங்கம், வெள்ளி குடத்தில் புனித நீர் சுமார் 12 கிமீ எடுத்து செல்லப்பட்டு புனிதீர்த்தம் எடுத்து, நொச்சியம் கரையில் இருந்து மண்ணச்சநல்லூர் வழியாக வெள்ளிக் குடத்தை வழியில் எங்கும் கீழே வைக்காமலும் , நிற்காமல் ஓடிக்கொண்டே குடங்களை மாற்றி  திருவெள்ளறை குசஹஸ்த தீர்த்தம் அடைந்தனர். அங்கிருந்து ஆண்டாள் யானை மீது தங்ககுடத்தில் புனித தீர்த்தம் எடுத்து  மங்கள இசையுடன் புண்டரீகாட்சப் பெருமாள் சன்னதி சென்றடைந்தது. பின்னர் ஜேஸ்டாஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்