அய்யம்பாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் வருடாபிஷேகம்



பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஐயப்பன் யானை வாகனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். இன்று வருடாபிஷேகம் நடந்தது‌. ஐயப்பனுக்கு தேன், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தர்மசாஸ்தா ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்