அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்; முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து



கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக கவர்னர் அர்லேகர், முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளர்.


முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தி: அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்,  தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.


கவர்னர் அர்லேகர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: கரியவன் கருணையில் பெரியவன்; இறைவடிவங்களில் பன்முகத்தன்மை கொண்ட பரந்தாமன். எல்லா நிலைகளிலும் ஏகமாய் பொருந்தும் இறைவடிவம் கிருஷ்ணன் ஒருவனே! எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு கிட்டிய பணியை கீர்த்தியாய் செய்த கிருஷ்ணனின் வாழ்வே கீதை தான் என கவர்னர் கூறியுள்ளார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்