விளாச்சேரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா; கருட வாகனத்தில் கிருஷ்ணர் உலா



திருநகர்: மதுரை விளாச்சேரி அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேத குருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று துவங்கியது.‌ காலை சுப்ரபாதம் முடிந்து யாக பூஜை நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணியுடன் புறப்பாடாகினார். இரவு 108 கலச பூஜை துவங்கியது. நாளை காலை கண்ணனை தொட்டிலில் இடும் நிகழ்ச்சியும், பஜனை பூஜை முடிந்து உறியடி உற்ஸவம், கிருஷ்ண லீலைகள் உபன்யாசம் நடக்கிறது. செப். 6 அன்று வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணி தாயார் திருக்கல்யாணம் நடைபெறும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்