கிருஷ்ண ஜெயந்தி; திருவொற்றியூர் கண்ணபிரான் கோவிலில் மகா திருமஞ்சனம்



சென்னை; திருவொற்றியூர் தாங்கல், தியாகராயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணபிரான் சுவாமி திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று சுவாமிக்கு மகா திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.


இதையொட்டி, ஸ்ரீ கண்ணபிரான் சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அபிஷேகங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தப்பட்டு, பலவண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அரசருக்கே உரிய கம்பீர தோற்றத்தில் ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. ராஜா அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ கண்ணபிரான் சுவாமியை திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டால் கோவில் வளாகம் முழுவதும் பக்தி நிறைந்த சூழல் நிலவியது. ராஜா அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ கண்ணபிரான் சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள், சுவாமியின் அருளைப் பெற்றுச் சென்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்