குண்டத்து காளியாதேவி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை



மேட்டுப்பாளையம்: அமாவாசையை முன்னிட்டு, குண்டத்து காளியாதேவி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.


மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சி, ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாதம் அமாவாசை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு அமாவாசை பூஜை நடந்தது. பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன், சிவலிங்கம், கங்காதேவி, முருகன், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு, அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது.


பின்பு குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட,16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அலங்காரம் செய்து பூஜை செய்தனர். கோவில் எதிரே உள்ள விநாயகர், காளிதேவி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பூஜைகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்தனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில் நடை திறந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை முடிந்த பின், சுவாமியை வழிபட பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன் சுவாமியையும், பக்காசூரன் சுவாமியையும் வழிபட்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்