புத்தேரி பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் நாள் சிறப்பு பூஜை



திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் நாள் சிறப்பு பூஜை நடந்தது.


அதனையொட்டி, இன்று காலை உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனையும், முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை (19ம் தேதி) முதல் சனிக்கிழமை புஷ்ப அலங்காரம், வரும், 26ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை காய்கறி அலங்காரம், அக்., 3ம் தேதி மூன்றாம் சனிக்கிழமை பழ அலங்காரம், 10ம் தேதி நான்காவது சனிக்கிழமை சந்தனகாப்பு அலங்காரம், 17ம் தேதி ஐந்தாவது சனியன்று முத்தங்கி அலங்காரம் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்